Wednesday, September 10, 2008

ரயில் நிலையம்


சைதை ரயில் நிலையம். காலை மணி 7.00. ஏங்கேயோ ஒரு குறல் "துட்டு இருந்தா ரெண்டு இட்லி சாப்ட தரியா!!"...........

இரண்டு நிமிடங்கள் சென்றது...........

எனக்கு முன்பு அதே குறல்
வந்து "துட்டு இருந்தா ரெண்டு இட்லி சாப்ட தரியா!!". நான் தயங்கினேன். பின்பு தலையசைத்து மறுத்து விட்டேன். அவர் நகர்ந்து சென்றார். அவருக்கு சுமார் ௭ழுவது வயது இருக்கும். பரிதாப தோற்றம். தழுதழுத்த குறல். என் நெஞ்சை வருடியது. வேகமாக அவரிடம் சென்றேன், "இந்தாங்க" என்றேன் இரு பத்து ரூபாய் தாள்களை கொடுத்து. அவரது முகம் மலர்ந்தது. விருவிருவென சென்றார். ஆம்! சாப்பிட தான் செல்கிறார். எனக்கு நிம்மதியாக இருந்தது.............

இரண்டு நிமிடங்கள் சென்றது...........

தூரத்தில்
ஒரு குறல் "துட்டு இருந்தா ரெண்டு இட்லி சாப்ட தரியா!!". ஆம்! அதே குறல்! அதே ஆள்!